புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 26 அக்டோபர் 2022 (12:27 IST)

ரெடியாகிறது சர்தார் 2! இரண்டாம் பாகங்களில் கொடிக்கட்டி பறக்கும் கார்த்தி!

Sardar 2
கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கிய சர்தார் திரைப்படம் வெற்றியடைந்த நிலையில் அதன் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கி வெளியாகியுள்ள படம் “சர்தார்”. இந்த படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி, உளவாளி என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் ஹிட் அடித்துள்ளது.

விருமன், பொன்னியின் செல்வனை அடுத்து சர்தாரும் வெற்றி பெற்றுள்ளதால் ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளார் கார்த்தி. இந்நிலையில் சர்தார் இரண்டாம் பாகம் வருமா என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

கார்த்தியின் அடுத்த பட டைட்டில் இதுதான்: வீடியோ வெளியீடு


இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் கார்த்தி “இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் இரண்டாம் பாகம் வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர். அனைவரின் கோரிக்கையை ஏற்று சர்தார் 2 எடுக்க முடிவு செய்துள்ளோம்” என்று அறிவித்துள்ளார். இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் பல ஹீரோக்களுக்கு இரண்டாம் பாகம் என்பது அதிர்ஷ்டம் இல்லாதது. முதல் பாக வெற்றியையும் கூட இரண்டாம் பாகத்தின் தோல்வி மறைய செய்து விடும். ஆனால் கார்த்தி தொடர்ந்து கைதி 2, பொன்னியின் செல்வன் 2, சர்தார் 2 என இரண்டாம் பாகங்களில் இறங்கி கலக்குவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Prasanth.K