வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (09:12 IST)

மீண்டும் இணையும் ஆரஞ்சு மிட்டாய் படக் கூட்டணி- விஜய் சேதுபதி எடுத்த முடிவு!

பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரித்து வசனம் எழுதி நடித்த படம், ஆரஞ்சு மிட்டாய்.  கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சகர்களின் பாராட்டை பெற்றது. ஆனால் மிக மோசமான வசூலைப் பெற்றது.

பல பேட்டிகளில் தனது மனதுக்கு மிகவும் நெருக்கமான படம் என விஜய் சேதுபதி ஆரஞ்சு மிட்டாய் படத்தைப் பற்றி பேசி இருந்தார்.

இந்நிலையில் இப்போது அந்த பட இயக்குனர் பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம் விஜய் சேதுபதி. விரைவில் இந்த படம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.