1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 13 அக்டோபர் 2022 (19:28 IST)

கார்த்தியின் ‘சர்தார்’ சென்சார் தகவல் அறிவிப்பு!

sardar new
கார்த்தி நடித்த ‘சர்தார்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து வரும் தீபாவளி திருநாளில் இந்த படம் ரிலீசாக உள்ளது
 
இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் சென்சார் தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ‘சர்தார்’ படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அக்டோபர் 21ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இரண்டு வேடங்களில் கார்த்தி நடித்துள்ள இந்த படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள படம் கார்த்தியின் சூப்பர் ஹிட் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva