5 நாட்களில், உலகளவில் ‘சர்தார்' வசூல் இத்தனை கோடியா?
கார்த்தி நடித்த ‘சர்தார்' திரைப்படம் வெளியாகி ஐந்து நாட்கள் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் வசூல் குறித்த தகவல் திரையுலகினரை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
தீபாவளி விருந்தாக கார்த்தி நடித்த ‘சர்தார்' மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ’பிரின்ஸ்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. இதில் ‘பிரின்ஸ்’ திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெறாத நிலையில் எதிர்பார்த்ததைவிட அதிகமாக ’சர்தார்’ வசூல் செய்து வருகிறது
‘சர்தார்' படம் உலகம் முழுவதும் 5 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சேட்டிலைட் டிஜிட்டல் மற்றும் ஆடியோ விற்பனை ஆகியவை சேர்த்து இதுவரை மொத்தம் 76 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்த படத்தின் பட்ஜெட் 45 கோடி என்ற நிலையில் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு வசூலை இந்த ‘சர்தார்' பெற்று உள்ளதை அடுத்து படக்குழுவினர் மகிழ்ச்சியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran