20 கோடி பட்ஜெட், 200 கோடி வசூல்: காந்தாராவின் சூப்பர் வெற்றி!
100 கோடி 200 கோடி பட்ஜெட்டில் படம் எடுத்து அந்த படம் தோல்வியடைந்து கொண்டிருக்கும் நிலையில் வெறும் 20 கோடியில் எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படம் 200 கோடி வசூல் செய்திருப்பது திரையுலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய திரைப்படம் காந்தாரா. இந்த படம் கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது
இந்த படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 100 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் தற்போது 200 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது. வெறும் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 200 கோடி வசூல் செய்திருப்பது திரையுலகினர்களை பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
100 கோடி முதல் 500 கோடி வரை பட்ஜெட்டில் படம் எடுத்து சுமாரான வெற்றியை பெறும் படங்களுக்கு மத்தியில் காந்தாரா படத்தின் மிகப்பெரிய வெற்றியை இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva