படங்களில் நடிக்கும் முன் கார்த்தி போடும் ஒரே கண்டீஷன் இதுதானாம்!

Last Modified புதன், 26 மே 2021 (13:20 IST)

நடிகர் கார்த்தி தான் நடிக்கும் படங்களில் எக்காரணம் கொண்டும் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் எனக் கூறிவருகிறாராம்.

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். 10 வருடங்களுக்கும் மேலாக நடித்து வரும் அவர் 21 படங்கள் மட்டுமே நடித்துள்ளார். அதில் பெரும்பாலான படங்கள் ஹிட்டாகியுள்ள நிலையில் தன் படங்களில் நடிப்பதற்கு முன்னதாக ஒரே ஒரு கண்டீஷன் மட்டும்தான் போடுவாராம். அது என்னவென்றால் படத்தில் எக்காரணம் கொண்டும் புகைப் பிடிப்பது போன்ற காட்சிகள் இருக்கக் கூடாது என்பதுதானாம். அதை தனது எல்லா படங்களிலும் ஸ்ட்ரிக்ட்டாக பாலோ செய்து வருகிறாராம்.இதில் மேலும் படிக்கவும் :