செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 26 மே 2021 (12:38 IST)

வைரமுத்து விஷயத்தில் மட்டும் அமைதி காப்பது ஏன்? கனிமொழிக்கு சின்மயி கேள்வி!

சில நாட்களாக சமூகவலைதளங்களின் மூலம் பரபரப்பாக விவாதிக்கப்படும் பத்மா சேஷாத்ரி பள்ளி பாலியல் தொல்லைகள் குறித்து திமுக எம் பி கனிமொழி கண்டனம் தெரிவித்திருந்தார்.

சென்னையில் உள்ள பிரபல பள்ளியான பத்மா சேஷாத்திரி பள்ளியில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பலரும் அந்த பள்ளியில் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் மற்றும் சாதி ரீதியான தொல்லைகள் குறித்து பேச ஆரம்பித்துள்ளனர். இந்த விவகாரம் வெளியே தெரிவதற்கு திமுக எம்பி கனிமொழி இதுகுறித்து பேசியதும் முக்கியக் காரணமாக அமைந்தது. அதனால் பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் இப்போது பாடகி சின்மயி கனிமொழிக்கு கேள்வி ஒன்றை விடுத்துள்ளார். அதில் ‘ நான் மற்றும் 16 பெண்கள் வைரமுத்து மீது வைத்த குற்றச்சாட்டுகள் அப்படியே உள்ளன. அதுகுறித்தும் நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறேன். ஆனால் என்ன காரணத்தால் என் குற்றச்சாட்டு தகுதி பெறாததாக ஆனது எனத் தெரியவில்லை’ எனக் கூறியுள்ளார்.