வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: சனி, 25 ஜூன் 2022 (15:00 IST)

கார்த்திகை நட்சத்திர நாளில் முருகப்பெருமான் வழிபாடு !!

Lord Murugan
கார்த்திகை நட்சத்திர நாளில், கந்தபெருமானை வணங்கினால் நம் கவலையெல்லாம் பறந்தோடும் என்பது ஐதீகம். கடன் தொல்லையில் இருந்து மீளச் செய்வார் கந்தவேலன்.


இன்று கார்த்திகை நட்சத்திரம். எனவே மாலையில் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று முருகக் கடவுளைத் தரிசிக்கலாம்.

முருகனுக்கு உரிய நட்சத்திரம் கார்த்திகை. இந்த நாளில், முருகப்பெருமானை வணங்குவது வளம் சேர்க்கும். நலம் தரும். நல்லன எல்லாம் தந்து நம்மையும் நம் வாழ்வையும் உயர்த்தி அருள்வார் முருகக் கடவுள்.

செவ்வாய் தோஷத்தால் திருமணம் தள்ளிப் போகிறதே என்று கவலைப்படுவோர், வீடு மனை வாங்கு வதிலோ விற்பதிலோ சிக்கல்கள் இருக்கிறது என கலங்குவோர், உரிய உத்தியோகம் கிடைக்கவில்லை மற்றும் உத்தியோகத்தில் பதவி உயர்வோ சம்பள உயர்வோ கிடைக்க வில்லையே என வருந்துவோர் இந்தக் கார்த்திகை நட்சத்திர நன்னாளில், மாலையில் முருகப் பெருமானை தரிசிக்கலாம்.

கோயிலுக்குச் சென்று அற்புதமாகக் காட்சி தரும் சுப்ரமண்யருக்கு செவ்வரளி மாலை சார்த்தி மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கும். மனையில் உள்ள வழக்குகள் வெற்றியைத் தேடித் தரும்.