வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 24 நவம்பர் 2022 (09:00 IST)

ஓடிடியில் வெளியானது பிளாக்பஸ்டர் காந்தாரா திரைப்படம்!

கேஜிஎஃப் திரைப்படத்தின் மூலம் பிரபலமான தயாரிப்பு நிறுவனமானது ஹோம்பலே பிலிம்ஸ். அடுத்து வரிசையாக பல திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் அவர்களின் அடுத்த வெளியீடாக ரிலீஸ் ஆன காந்தாரா திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று  இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. ஆனால் இந்த திரைப்படத்தில் காடுகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளதாக இடதுசாரியினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.

இந்நிலையில் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் சுமார் 400 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட காந்தாரா திரைப்படம் பட்ஜெட்டை விட 20 மடங்கு அதிக வசூலை திரையரங்குகள் மூலமாக மட்டுமே வசூலித்துள்ளது.

இந்நிலையில் இன்று 5 மொழிகளில் காந்தாரா திரைப்படம் ப்ரைம் வீடியோ ஓடிடியில் வெளியாகியுள்ளது.