1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Kantara 2 script writing work started rishab shetty tweet

காந்தாரா 2 படத்தின் முதல் அப்டேட்டைக் கொடுத்த இயக்குனர் ரிஷப்!

காந்தாரா
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸான காந்தாரா திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று  இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. ஆனால் இந்த திரைப்படத்தில் காடுகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளதாக இடதுசாரியினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.

இதையடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் வேலைகள் தொடங்கியுள்ளதாக தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்போது படத்தின் 100 ஆவது நாள் விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் ரிஷப் ஷெட்டி “காந்தாரா படம்தான் இரண்டாம் பாகம்.  இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் அடுத்த பாகத்தில் சொல்லப்பட உள்ளது. இந்த படத்தில் தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்படும்.” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று யுகாதி திருநாளை முன்னிட்டு இரண்டாம் பாகத்தின் எழுத்துப் பணிகளை தொடங்கியுள்ளதாக படத்தின் இயக்குனரும் கதாநாயகனுமான ரிஷப் ஷெட்டி அறிவித்துள்ளார். அதை தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனமும் உறுதி செய்துள்ளது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
சூரியின் படத்தைத் தயாரிக்கும் மாவீரன் பட தயாரிப்பாளர்!