செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 14 டிசம்பர் 2018 (15:32 IST)

தொடங்கியது விஜய் சேதுபதியின் அடுத்தப் படம் – மாமனிதன் அப்டேட்

இயக்குனர் சீனு ராமசாமி நடிப்பில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் வருடத்திற்கு குறைந்தது 5 படங்களாவது வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப் பெறுகிறது. வரிசையாக தனது படங்கள் ரிலிஸுக்குக் காத்திருக்க விஜய் சேதுபதி தனது அடுத்தப் படத்தின் படப்பிடிப்பினை இன்று சத்தமின்றித் தொடங்கியுள்ளார்.

இவ்வளவு பிசியாக வலம் வரும் விஜய் சேதுபதியைத் தனது தென்மேற்குப் பருவக்காற்றுப் படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சீனு ராமசாமி. அந்தப் படம் பெரிய அளவில் வெற்றிப் பெறவில்லை என்றாலும். அதன் பின்னர் விஜய் சேதுபதி தன் திறமையால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவாகியுள்ளார்.

ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் இன்றி தவித்த சீனு ராமசாமிக்காக கால்ஷீட் கொடுத்து இடம் பொருள் ஏவல் படத்தினை நடித்துக் கொடுத்தார். ஆனால் அந்தப் படம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கிறது. அதன் பிறகு இருவரும் இணைந்து தர்மதுரைப் படத்தினை உருவாக்கினர். படமும் சூப்பர் ஹிட்.

அதையடுத்து அந்த ஹிட் காம்போ தற்போது மீண்டும் மாமனிதன் படம் மூலம் இணைய இருக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதனை இயக்குனர் சீனு ராமசாமி தனது டிவிட்டரில் அறிவித்துள்ளார். இந்தப் படத்திற்காக முதல் முதலாக இளையராஜாவும் யுவன்ஷங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைக்க உள்ளனர்.