திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 27 ஜூன் 2018 (22:08 IST)

திருச்செந்தூர் சென்று மொட்டை போட்ட உதயநிதி பட இயக்குனர்

ஒரு திரைப்படத்தில் நடித்து, தயாரித்து, இயக்கி முடிந்தவுடன் அந்த படத்தின் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் தங்களுக்கு பிடித்த கோவிலுக்கு சென்று அந்த படம் வெற்றி அடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்வது வழக்கம். ரஜினி, அஜித் போன்றோர் ஒரு படத்தில் நடித்து முடித்தவுடன் திருப்பதி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
 
இந்த நிலையில் உதயநிதி, தமன்னா நடித்த 'கண்ணே கலைமானே' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் சீனுராமசாமி, படத்தின் பணிகள் முழுவதும் முடிவடைந்து ரிலீசுக்கு தயார் செய்துள்ள நிலையில் திருச்செந்தூர் சென்று மொட்டை போட்டுள்ளார். அவருடன் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஜலந்தர் வாசனும் உடன் சென்றுள்ளார்
 
இதுகுறித்து இயக்குனர் சீனுராமசாமி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ரெட்ஜயண்ட் மூவீஸ் வழங்கும் திரு,உதயநிதி செல்வி தமன்னா நடிக்கும் #கண்ணேகலைமாணே திரைப்படம் இனிதே நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.நானும் ஒளிப்பதிவாளர் ஜலந்தர் வாசனும்  திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு முடி காணிக்கை செலுத்தினோம்.
 
உதயநிதி, தமன்னா, வடிவுக்கரசி, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது