செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : திங்கள், 4 ஜூன் 2018 (21:25 IST)

“உதயநிதி விஷயத்தில் தலையிடாமல் இருப்பதுதான் நான் அவருக்குச் செய்யும் உதவி” - கிருத்திகா உதயநிதி

‘உதயநிதி விஷயத்தில் தலையிடாமல் இருப்பதுதான் நான் அவருக்குச் செய்யும் உதவி’ என கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார்.

‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. இவருடைய இரண்டாவது படமான ‘காளி’ சமீபத்தில் ரிலீஸானது. விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என நான்கு ஹீரோயின்கள் நடித்தனர்.

கிருத்திகா உதயநிதியின் குடும்பம் என்பதால், அரசியல் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. “நான் அவருக்குச் செய்யும் மிகப்பெரிய உதவி, அவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதுதான். அந்த உதவியைத்தான் அவரும் எனக்குச் செய்கிறார். அவரவருக்கு என்ன விருப்பமோ, அவங்களுக்கு என்ன பிடிச்சிருக்கோ... அதைத் தொடரலாம். அரசியலும் சரி, சினிமாவும் சரி... எதைத் தேர்ந்தெடுக்கிறார்கள், எதை ஒதுக்கிறார்கள் என்பது மக்கள் கையில் இருக்கிறது” என்கிறார் கிருத்திகா உதயநிதி.