திரையரங்கில் படுதோல்வி… தாமதமாக ஓடிடியில் ரிலீஸாகும் ‘கண்ணப்பா’!
பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள "கண்ணப்பா" திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்தில் சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், ராகுல் ராமகிருஷ்ணா, பிரம்மானந்தம், மோகன் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அதோடு மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார், காஜல் அகர்வால் மற்றும் மோகன் பாபு போன்ற முன்னணி நட்சத்திரங்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் செலவு செய்யப்பட்டது. படத்தின் பட்ஜெட் சுமார் 200 கோடி ரூபாய் என சொல்லப்பட்டது. ஆனால் படம் திரையரங்கில் சுத்தமாக எடுபடவில்லை. இந்த ஆண்டின் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது.
இந்த படம் இரண்டு மாதங்களாகியும் ஓடிடியில் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் செப்டம்பர் 4 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் என சொல்லப்படுகிறது.