புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 16 டிசம்பர் 2021 (13:10 IST)

மீரா மிதுனையும் காணவில்லை… ஹோட்டலில் இருந்த பொருட்களையும் காணவில்லை-இயக்குனர் புகார்

நடிகை மீரா மிதுன் என்றாலே சர்ச்சைதான் என்று சொல்லுமளவுக்கு அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

நடிகை மீரா மிதுன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தகவல் வெளியானது. இது குறித்த வீடியோ வைரல் ஆன நிலையில் அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து திடீரென மீராமிதுன் தலைமறைவான நிலையில் அவரை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்தனர். பின்னர் கேரளாவில் உள்ள ஆலப்புழா என்ற இடத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மீராமிதுன் தங்கியிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்தது.

வெளியில் வந்த அவர் இப்போது பேயக் காணோம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்னும் இரண்டு நாள் படப்பிடிப்பு மீதம் இருக்கும் நிலையில் அவரும் அவருடன் தங்கி இருந்த 6 உதவியாளர்களும் தலைமறைவாகிவிட்டதாக படத்தின் இயக்குனர் புகாரளித்துள்ளார். மேலும் தங்கி இருந்த ஹோட்டல் அறையில் இருந்த பொருட்களையும் எடுத்துச் சென்று தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்திவிட்டதாக கூறியுள்ளார்.