திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (08:04 IST)

கணிதன் இயக்குனர் சொன்ன கதை… உற்சாகமான ஜெயம்ரவி சொன்ன பதில்!

கணிதன் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் சந்தோஷ் இப்போது ஜெயம் ரவியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.

அதர்வா நடிப்பில் உருவான கணிதன் படத்தை இயக்கியவர் சந்தோஷ். இவர் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸின் உதவியாளர். கணிதன் படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறாததால் நீண்ட இடைவெளிக்குப் பின் இப்போது அவர் தனது இரண்டாவது படத்தை ஜெயம்ரவியை வைத்து இயக்க உள்ளாராம்.

இவர் சொன்ன கதையைக் கேட்டு ஜெயம் ரவி உற்சாகமாகி அவருக்காக தயாரிப்பாளரை தானே பரிந்துரையும் செய்துள்ளாராம்.