திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (07:58 IST)

விஜய் மற்றும் அஜய் ஞானமுத்து கூட்டணியில் உருவாகும் படம்!

இயக்குனர் அஜய் ஞானமுத்து மற்றும் விஜய் கூட்டணியில் ஒரு படம் உருவாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

டிமாண்டி காலணி மற்றும் இமைக்கா நொடிகள் மூலமாக கவனம் ஈர்த்தவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து. இப்போது விக்ரம் நடிப்பில் கோப்ரா படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் விரைவில் இவர் விஜய்யை இயக்க உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.

அஜய் ஞானமுத்து துப்பாக்கி படத்தில் இணை இயக்குனராக பணியாற்றினார். அப்போது விஜய்யுடன் அவருக்கு நெருங்கிய நட்பு இருந்ததாம். அதனால் விரைவில் இந்த கூட்டணி இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.