திங்கள், 16 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 22 ஜூலை 2024 (14:17 IST)

ரஜினியின் கூலி படத்தில் இணையும் மஞ்சும்மள் பாய்ஸ் நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் சில தினங்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சத்யராஜ், பஹத் பாசில், ஸ்ருதிஹாசன் ஆகியோர் இதுவரை ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படும் நிலையில் பாலிவுட் மற்றும் டோலிவுட் நடிகர்கள் சிலரும் படத்தில் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் பஹத் பாசிலும் ஒருவராக இருப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர் இப்போது வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அவர் நடிக்க இருந்த வேடத்தில் இப்போது மலையாள நடிகர் சௌபின் சாஹிர் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.