வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (08:40 IST)

மாஃபியாக்களின் கல்யாணத்தில் நான் நடனமாட மாட்டேன்… கங்கனா ரனாவத் தடாலடி

பாலிவுட்டின் சர்ச்சை நாயகியாக வலம் வருகிறர கங்கனா ரனாவத். சக பாலிவுட் கலைஞர்கள் பலரையும் பற்றி கடும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் தெரிவித்த ஒரு குற்றச்சாட்டில் “தான் எங்கு சென்றாலும் தன்னை பின் தொடர்ந்து வந்து உளவு பார்க்கிறார்கள் என்றும் தெருக்கள், பார்க்கிங் இடஙள், மற்றும் வீட்டு  மாடியிலும் தன்னை உளவு பார்ப்பதாகவும் இதற்கென ஜூம் லென்ஸை கையில் வைத்திருப்பதாகவும்” குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் கூறியுள்ள கருத்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர் ஒருவரின் கேள்விக்கு டிவிட்டரில் பதிலளித்த கங்கனா “நான் ஒரு அரசியல் மற்றும் தொழிலதிபர் குடும்பத்தில் இருந்து வந்தவள். என் மனப்பாண்மை எங்கிருந்து வந்தது என்பதை மாஃபியாக்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.  நான் ஏன் மாஃபியாக்களின் திருமண நிகழ்வுகளில் நடனமாடுவதில்லை என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனால் என்னை ஆணவம் பிடித்தவள் என்று சொல்கிறார்கள். இது ஆணவமா? இல்லை நேர்மையா?” எனக் கூறியுள்ளார்.