அந்த காலத்துல இப்படிதான் மன்னர்கள்….! – பெகாசஸ் குறித்து கங்கனா சூசக பதிவு!

Prasanth Karthick| Last Modified செவ்வாய், 20 ஜூலை 2021 (16:39 IST)
மத்திய அரசு பெகாசஸ் மென்பொருள் மூலமாக பலரை ஒட்டு கேட்டதாக வெளியான சர்ச்சையை தொடர்ந்து நடிகை கங்கனா ரானவத் பதிவு வைரலாகியுள்ளது.

இஸ்ரேலின் பெகாசஸ் மென்பொருள் வழியாக மத்திய அரசு 300க்கும் அதிகமானோர் செல்போன் பேச்சுகளை ஒட்டுக்கேட்டதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பாராளுமன்றம் தொடங்கிய நிலையில் எதிர்கட்சிகள் அமளியால் தொடர்ந்து இன்று வரை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள நடிகை கங்கனா ரனாவத் “அந்த காலங்களில் அரசு நிர்வாகத்தை பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள மன்னர்கள் ரகசியமாக ஊருக்குள் சென்று கேட்பார்கள். மன்னர்களுக்கு அதற்கான உரிமை உள்ளது. நான் பெகாசஸ் பற்றி பேசவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :