தேர்தலில் ஜெயித்தாலும் சினிமாவை விட்டு விலக முடியாது: கங்கனா ரனாவத்
பாராளுமன்ற தேர்தலில் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டி என்ற தொகுதி தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடும் நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றாலும் தன்னால் இப்போதைக்கு சினிமாவிலிருந்து விலக முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடும் நடிகை கங்கனா ரனாவத் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் இந்த தேர்தலில் அவர் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாகும் கங்கனா ரனாவத் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது தான் தேர்தலில் வெற்றி பெற்றாலும் இப்போதைக்கு தன்னால் சினிமாவிலிருந்து விலக முடியாது என்றும் தன்னுடைய பல படங்கள் பாதியில் இருக்கிறது என்பதால் அந்த படங்களை எல்லாம் முடிக்க வேண்டிய கட்டாயம் தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் எமர்ஜென்சி என்ற இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை அவரே தயாரித்து இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva