வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 6 நவம்பர் 2022 (19:23 IST)

டுவிட்டருக்கு கட்டணம் வசூலிப்பது சரிதான்: கங்கனா ரனாவத்

Kangana
டுவிட்டரில் புளூடிக் வைத்திருப்பவருக்கு கட்டணம் செலுத்தும் அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த அறிவிப்பு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
 
ஆனால் நடிகை கங்கனா ரனாவத் டுவிட்டர் புளூடிக்  வசதிக்கு கட்டணம் வசூலிப்பது சரியான நடவடிக்கைதான் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கிய பிறகு அறிவித்த அதிரடி அறிவிப்புகளில் ஒன்று ட்விட்டர் புளூடிக் கணக்கு வைத்திருப்பவர்கள் மாதம் எட்டு டாலர் செலுத்த வேண்டும் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் உலகில் இலவசமாக எதுவும் கிடைக்காது என்றும் டுவிட்டர் புளூடிக் வசதிக்கு கட்டணம் வசூலிப்பது சரிதான் என்றும் நடிகை கங்கனா ரணவத் தெரிவித்துள்ளார்
 
மேலும் டுவிட்டர் சமூக வலைதளம் மிகச்சிறப்பாக நம்பர் ஒன் சமூக வலைத்தளமாக செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். நடிகை கங்கனா ரனவத் டுவிட்டர் பக்கம் கடந்த ஆண்டு முடக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva