விளம்பரத்திலிருந்து நீக்கப்பட்ட கங்கனா ரனாவத்
இந்நிலையில், நடிகர் சோனு சூட் ஆக்ஸிஜன் கான்சண்டிரேட்டரை புரோமோட் செய்யும் ஒரு புகைப்படத்தை நெட்டிசன் ஒருவர் பகிர்ண்டுள்ளார். அதில், சோனுசூட் இந்தக் ஆக்ஸிஜன் கன்சண்டிரேட்டர்கள் ரூ.2லட்சம் என விளம்பரம் செய்வது போலிருந்தது.
இதற்கு சமூகவலைதளப் பக்கத்தில் சோனு சூட் பண்ம் சம்பாதிக்கும் மோசடிக்காரர் எனப் பதிவிட்டிருந்தார். இதை தலைவி படத்தில் நடித்த நடிகை கங்கனா தனது டுவிட்டர் பக்கத்தில் டேக் செய்திருந்தார்.
நெட்டிசன் ஒருவரின் கருத்தை கங்கனா ஆதரவளிக்கிறாரா என்பது கேள்விகள் மும்பை சினிமா வட்டாரத்திலும் ரசிகர்களிடம் உருவாகியுள்ளது.
அதேபோ. மேற்கு வங்க மாநிலதித்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக கங்கனா பதிவிட்ட டுவிட்டர் பதிவுக்கு பலத்த சர்ச்சைகள் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது டுவிட்டர் கணக்கை டுவிட்டர் நிறுவனம் சஸ்பெண்ட் செய்தது.
எனவே அவர் சமூக வளைதங்கள், தொலைக்காட்சிகளில் தோன்றும் விளம்பர நிறுவனங்கள் எல்லோரும் அவரை இனிமே விளம்பரங்களில் நடிக்க வைக்க மாட்டோம் எனக் கூறியுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தனது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது குறித்து கங்கனா, எனது கருத்துகளை வெளியிட பல வழிகள் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.