அடிக்கடி அதிகப்படி.. நடிகை கங்கனா கணக்கை முடக்கியது ட்விட்டர்!

Prasanth Karthick| Last Modified செவ்வாய், 4 மே 2021 (12:59 IST)
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அடிக்கடி சர்ச்சைக்குரிய பதிவுகளை இட்டு வந்த நிலையில் அவரது கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவிய “தலைவி” படத்தில் நடித்து வருகிறார். இவர் ட்விட்டரில் சமீப காலமாக இட்டு வரும் பதிவுகள் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இந்திய கொரோனா நிலவரம் குறித்து பாப் பாடகி ரிஹானா பதிவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவு முதலாக அடிக்கடி இவரது ட்விட்டர் பதிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் தற்போது இவரது ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. சர்ச்சைக்குரிய, வன்முறையை தூண்டும் வகையில் அவரது பதிவுகள் இருப்பதால் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :