ஜெயலலிதா பயோபிக்: எம்ஜிஆர் ஆக நடிக்கும் அரவிந்த் சாமி..?

Last Updated: வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (15:52 IST)
இயக்குனர் ஏ.எல்.விஜய் ’தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக உருவாக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தயராகவுள்ளது. 

 
ஜெயலலிதவாக நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ஒப்பந்தமாகியுள்ளார். மூன்று மொழி படங்களுக்கும் சேர்த்து நான்கு மாதங்கள் கால்ஷீட் கொடுத்து உள்ளாராம் கங்கனா. மேலும், இந்த படத்தில் நடிக்க அவருக்கு 24 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருக்கிறதாம்.  
 
படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மைசூரிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இப்படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்க உள்ளாராம்.
அரவிந்த்சாமியுடன் இதற்கான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கங்கனா மட்டுமின்றி, நித்யா மேனன் ஜெயலலிதாவாக ‘’அயர்ன் லேடி’’ என்ற பெயரில் பிரியதர்ஷினி என்ற பெண் இயக்குனர் எடுக்கும் படத்தில் நடிக்கிறார். அதோடு, கவுதம் மேனன் இயக்கயுள்ள வெப் சீரிஸில் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :