செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 17 செப்டம்பர் 2020 (11:25 IST)

பாலிவுட்டுக்குப் பெண்ணியத்தை நான்தான் கற்றுக்கொடுத்தேன் – அமிதாப் பச்சன் மனைவியிடம் சீறும் கங்கனா!

பாலிவுட்டில் போதைப் பழக்கம் அதிகமாக உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மாநிலங்களவை உறுப்பினர் ஜெயா பச்சன் பதிலளித்து பேசியுள்ளார்.

சுஷாந்த் மரணம் பாலிவுட்டில் பல்வேறு விவாதங்களைக் கிளறிவிட்டுள்ளது. அது இப்போது போதைப்பொருள் விவகாரத்தில் வந்து நிற்கிறது. பாலிவுட்டில் போதைப் பொருள் பழக்கம் மிக அதிகமாக உள்ளதாக மாநிலங்களவையில் பாஜக எம்.பி.யும், நடிகருமான ரவி கிஷண் பேசினார்.

அதற்குப் பதிலளித்த நடிகர் அமிதாப் பச்சனின் மனைவி எம்பி ஜெயா பச்சன் ‘ஒரு சிலர் செய்யும் தவறுக்காக வாய்ப்பளித்த பாலிவுட் திரையுலகையே குறை சொல்வதா?’ எனப் பேசினார்.

இந்நிலையில் ஜெயா பச்சனின் இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள கங்கனா ‘எந்த வாய்ப்பை பற்றி சொல்கிறீர்கள், கதாநாயகனோடு படுக்கையைப் பகிர்ந்தால்தான் வாய்ப்பு தருவேன் என சொன்னதே அதைப் பற்றியா? திரையுலகுக்கு பெண்ணியத்தைக் கற்றுக்கொடுத்தது நான்தான்… நீங்கள் இல்லை’ எனக் கூறியுள்ளார்.