ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 16 செப்டம்பர் 2020 (20:41 IST)

உங்கள் மகன் தூக்கில் தொங்கியிருந்தால்? சூப்பர் ஸ்டார் மனைவியிடல் கேள்வி எழுப்பிய கங்கனா !

பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மனைவியும் நடிகையுமான ஜெயா பச்சன்  சமாஜ்வாதி கட்சி எம்பியாக உள்ளார். தற்போது பார்லிமெண்ட் கூட்டத்தொடர் நடந்துவருவதால் அதில் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான விவகாரத்தில்  பாலிவுட்டில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது குறித்து குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக பேசிய ஜெயா பச்சம்  இதற்காக ஒட்டுமொத்த பாலிவுட் உலகையே குற்றன் சாட்டக்கூடாது என தெரிவித்தார்.

இவரது கருத்து பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

எனவே முப்பையில் உள்ள ஜூகு என்ற பகுதியில் உள்ள அமிதாப்பச்சனின் இல்லத்திற்கு கூடுதல் போலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 இந்நிலையில் சுஷாந்த் மரண வழக்கில் வாரிசு அரசியலை குற்றம்சாட்டி வரும்  கங்கனா ரனாவத், மாஃபியா கும்பல் என்று சிலரை திட்டி வருகிறார்.

இந்த நிலையில் ஜெயா பச்சன் இன்று பார்லிமெண்ட் கூட்டத்தொடரில் தெரிவித்த கருத்துக்கு விமர்சனம் தெரிவித்துள்ளார் கங்கனா.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :
 அதாவது என் இடத்தில் உங்கள் மகள் இருந்து பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது உங்களின் மகன் பல துன்புறுத்தல்களுக்கு ஆளாகி ஒருநாள் தூக்கில் தொங்கியிருந்தாலோ நீங்கள் இதையே தான் சொல்லியிருப்பீர்களா என்று தெரிவித்திருந்தார்.

மேலும் பாலிவுட் சினிமாவின் மூலம் வளர்ந்தவர்களே பெரிதாக வளர்ந்த பின் அதைக் குறைகூறுகின்றனர் என்று கூறியிருந்தார். இதற்குப் நான் எனக்காக கதாப்பாத்திரத்தின் மூலம் சம்பாதித்தது. பெண்ணியம் தொடர்பானவற்றை சினிமாவில் கொடுத்தேன் என்று கூறியுள்ளார்.