1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 8 மார்ச் 2023 (18:11 IST)

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த பட அறிவிப்பு.. சிம்பு ஹீரோவா?

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த பட அறிவிப்பு குறித்த வீடியோ வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தில் சிம்பு நாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 
 
உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் 54ஆவது படம் குறித்த அதிகாரப்பூர் அறிவிப்பு சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சிம்பு நாயகனாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த படத்தின் அப்டேட் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் தேசிங்கு பெரிசாமி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் அறிவிப்பு தான் நாளை வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர். 
 
தேசிங்கு பெரியசாமி சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சொன்ன கதையில் தான் தற்போது சிம்பு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva