வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : வியாழன், 9 மார்ச் 2023 (18:57 IST)

கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

kamal simbu1
கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்க இருக்கும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது.
 
 ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் 56வது படமாக உருவாக இருக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும் இந்த படம் சிம்புவின் 48வது படம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
மேலும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் அடுத்த ஆண்டு இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran