ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 29 ஜூன் 2024 (07:29 IST)

என் வேலை இனிமேல்தான் ஆரம்பம்… கல்கி படம் பார்த்த கமல் பேச்சு!

பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கல்கி திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்க நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது.

இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் ஜூன் 27 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாந்து. படம் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் முதல் நாளில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.

இந்த படத்தைப் பார்த்த பின்னர் பேசிய கமல்ஹாசன் “நான் இதுபோல மாயாஜாலக் கதைகளில் நடித்ததில்லை. நான் மனிதர்களோடு இருப்பவன். ஆனாலும் இந்த கதை சுவாரஸ்யமாக சொல்லப்பட்டுள்ளது. அறிவியலோடு புராணங்களை இணைத்து கதை சொல்லியுள்ளார் நாக் அஸ்வின். நான் இந்த பாகத்தில் சில நிமிடங்களே வருகிறேன். எனக்கான வேலை இரண்டாம் பாகத்தில்தான் உள்ளது.

இந்த படத்தில் நடிக்க நான் முதலில் தயங்கினேன். அமிதாப் பச்சன், பிரபாஸ் எல்லாம் இருக்கிறார்கள். இந்த படத்தில் நான் என்ன செய்யப் போகிறேன் என யோசித்தேன். இதற்கு முன்னர் நான் கெட்டவனாகவோ, சைக்கோவாக நடித்திருக்கிறேன். ஆனால் கல்கி படத்தில் இருக்கும் கதாபாத்திரம் வேறு மாதிரியானது” எனப் பேசியுள்ளார்.