1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 25 ஜூன் 2024 (14:21 IST)

இந்தியன் 2 வுக்குக் கதை கொடுத்தது அரசியல்வாதிகள்தான் – கமல்ஹாசன் பேச்சு!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. பாடல்களும் வெளியாகியுள்ளன. படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் சில பாடல்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளன. இந்த படத்துக்கான வியாபாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய கமல்ஹாசன் “இந்தியன் 2 படம் எடுப்பதற்குக் கருப்பொருளைக் கொடுத்தது அரசியல் வாதிகள்தான். அவர்கள் செய்யும் ஊழல் அதிகமாகி விட்டதால்தான் இந்தியன் தாத்தா மீண்டும் ஆவேசமாக வருகிறார். அவர்கள் செய்யும் ஊழலுக்கு நாமும் ஒரு காரணம்தான். நாம் கண்டுகொள்ளாமல் இருப்பதால்தான் அவர்கள் ஊழல் செய்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.