செவ்வாய், 2 ஜூலை 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 22 ஜூன் 2024 (08:29 IST)

தாத்தா வர்றாரு கதற விடப் போறாரு- இந்தியன் 2 டிரைலர் ரிலீஸ் எப்போது தெரியுமா?

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. பாடல்களும் வெளியாகியுள்ளன. படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் சில பாடல்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளன. இந்த படத்துக்கான வியாபாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையடுத்து படத்தின் டிரைலர் ஜூன் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே வெளியான பாடல்கள் மற்றும் டீசர் எதுவும் ரசிகர்களைப் பெரிதாக ஈர்க்கவில்லை. இந்நிலையில் டிரைலராவது ரசிகர்களைக் கவருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.