திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (11:24 IST)

தக் லைஃப் படத்தின் ஆக்‌ஷன் காட்சிக்காக ஸ்பெஷல் கேமரா… சிம்புவின் டெடிகேஷன்!

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் கமல்ஹாசன், சிம்பு திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், சிம்பு, அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் டெல்லி, ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் நடந்த நிலையில் பின்னர் சென்னையில் செட் அமைக்கப்பட்டு முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டன.  அடுத்த கட்டமாக முக்கியக் காட்சிகளுக்காக கோவாவுக்கு செல்ல உள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் ஒரு செட் அமைக்கப்பட்டு, ஆக்‌ஷன் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. அதில் சிம்பு நடித்துள்ள நிலையில் இந்த ஆக்‌ஷன் காட்சிக்காக அதி உயர் தொழில்நுட்பம் கொண்ட கேமரா ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆக்‌ஷன் காட்சிக்காக சிம்பு பிரேக் எடுக்காமல் நான்கு நாட்கள் தொடர்ந்து நடித்து கலக்கியுள்ளாராம்.