செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 20 செப்டம்பர் 2023 (16:08 IST)

கமல்ஹாசனின் நாயகன் திரைப்படம் ரி ரிலீஸ்…!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்கள் வளர்ந்த பின்னர் சாதிப்பது வெகு அரிது. அந்தவகையில் கதாநாயகனாகவும், திரைக்கதை எழுத்தாளராகவும், இயக்குனராகவும் பல பரிமானங்களில் தன்னை வெளிப்படுத்தி கலக்கி வருபவர் கமல்ஹாசன்.

கமல்ஹாசனின் திரைவாழ்க்கையில் மிக முக்கியமான படங்களில் ஒன்று நாயகன் திரைப்படம். கமல்ஹாசனுக்கு இரண்டாவது முறையாக தேசிய விருது பெற்றுத் தந்த திரைப்படமாக அமைந்த நாயகன் 1987 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. அந்த படத்தின் வெற்றி என்பது ரிலீஸுக்குப் பின்னர் காலம் செல்ல செல்ல விஸ்வரூபம் எடுத்தது.

இப்போதைய இளம் சினிமா ரசிகர்களும் நாயகன் திரைப்படத்தை ஒரு கல்ட் கிளாசிக் திரைப்படமாக கருதுகின்றனர். இந்நிலையில் இந்த படத்தினை இப்போது ரி ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 3 ஆம் தேதி, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் இந்த திரைப்படத்தை ரி ரிலீஸ் செய்கின்றனர்.