திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (11:26 IST)

மறுமலர்ச்சிச் சிந்தனையை தமிழ்நாட்டில் விதைத்த முன்னோடி: கமல்ஹாசனின் அண்ணா பிறந்தநாள் வாழ்த்து..

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். 
 
மேலும் அண்ணாவின் புகழ்களையும் பெருமைகளையும் சமூக வலைதளங்களில் பரவலாக பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தில் அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அவர் அதில் கூறி இருப்பதாவது
 
பேச்சாற்றல் எழுத்தாற்றல் சிந்தனையாற்றல் என்ற மூன்று பெரும் உபகரணங்களால் மறுமலர்ச்சிச் சிந்தனையை தமிழ்நாட்டில் விதைத்த முன்னோடி.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்கிற மூன்று  சொற்களை மந்திரம் போல இளைஞர்களின் மனதுக்குப் பழக்கிய ஆசான்.
 
தன் கொள்கைப் பிடிப்பால் இன்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் அவரை நினைவு கூர்வதில் மகிழ்கிறேன்
 
 
Edited by Mahendran