திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Murugan)
Last Updated : வியாழன், 14 செப்டம்பர் 2017 (17:26 IST)

அஜித் ஆசையில் மண்ணள்ளிப்போட்ட கமல்

அஜித்தின் ஆசையில் கமல் மண்ணள்ளிப்போட்ட கதைதான் கோடம்பாக்கத்தின் பரபரப்பான பேச்சாக இருக்கிறது. 


 

 
‘விவேகம்’ படத்தைத் தொடர்ந்து, அடுத்தும் சிவாவின் இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்தார் அஜித். அதை சிவாவிடம் சொல்ல, அவரும் அதை ட்விட்டரில் போட்டுவிட்டார். இதெல்லாம் ‘விவேகம்’ ரிலீஸுக்கு முன்.
 
‘விவேகம்’ ரிலீஸுக்குப் பின் கதையே வேறு. படத்தின் ரிசல்ட், அஜித்தைப் பயங்கரமாக யோசிக்க வைத்திருக்கிறதாம். கிட்டத்தட்ட 30 கோடி வரை நஷ்டம் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். எனவே, வேறு ஒரு இயக்குநரின் படத்தில் நடிக்கலாம் என அஜித் முடிவெடுத்தபோது, முதலில் நினைவுக்கு வந்தவர் ஷங்கர். ‘அவர் படத்தில் நடிப்பது தள்ளிக்கொண்டே போகிறதே…’ என்று நினைத்தவர், ஷங்கருக்கு இந்த விஷயத்தைத் தெரியப்படுத்தி இருக்கிறார்.
 
ஷங்கர் ஓகே சொல்லலாம் என்று நினைக்கும்போது, இடையில் புகுந்திருக்கிறார் கமல். ஒரு காலத்தில் எலியும், பூனையுமாக அடித்துக் கொண்டவர்கள், தற்போது நெருக்கமாகிவிட்டார்கள். அரசியல் பற்றிப் பேசிவரும் கமலுக்கு, சமூகக் கருத்துள்ள படத்தில் தற்போது நடிப்பது அவசியம் என நினைக்கிறாராம். எனவே, ஷங்கரின் அடுத்த படத்தில் நடிப்பதற்கு கமல் தயாராக இருக்கிறாராம். இதனால், அஜித்துக்கு ஓகே சொல்லாமல், கமல் படத்துக்கான கதையைத் தயார் செய்து வருகிறாராம் ஷங்கர்.