1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 6 செப்டம்பர் 2017 (15:28 IST)

அரசியலுக்கு வாருங்கள் ; கமல்ஹாசனை நேரில் சென்று வலியுறுத்திய எஸ்.வி.சேகர்

நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியலுக்கு வருவார் என நடிகர் எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக பல்வேறு சமூக நிகழ்வுகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். எனவே, அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதை அவரும் உறுதி செய்துள்ளார்.
 
இந்நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் இன்று காலை, ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரின் வீட்டிற்கு சென்று உரையாடினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “நானும் கமலும் 40 வருடங்களாக நண்பர்களாக இருக்கிறோம். சமீபகாலமாக அவர் பல்வேறு அரசியல் கருத்துகளை கூறி வருகிறார். எனவே, விரைவில் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என கோரிக்கை வைத்தேன். 
 
கமல்ஹாசன் நேர்மையானவர். எனவே, அவரைப் போன்றவர்கள் அரசியலுக்கு வருவது நாட்டுக்கு நல்லது. அவர் கட்சி தொடங்கினால், படித்தவர்கள் அவரை ஆதரிப்பார்கள். எனக்கும், கமலுக்கும் நிறைய கருத்துக்கள் ஒத்துப் போகும். எனவே, அவர் அரசியலுக்கு வருவதை நான் ஆதரிக்கிறேன்” என எஸ்.வி.சேகர் கூறினார்.