செவ்வாய், 2 ஜூலை 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 29 பிப்ரவரி 2024 (06:58 IST)

குணா நாஸ்டால்ஜியாவை கொடுத்த மஞ்சும்மள் பாய்ஸ்… படக்குழுவை சந்தித்து பாராட்டிய கமல்ஹாசன்!

கடந்த வாரம் வெளியான மலையாள திரைப்படமான மஞ்சும்மள் பாய்ஸ் திரைப்படம் கேரளா தாண்டியும் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கேரளாவின் மஞ்சும்மள் பகுதியில் வசிக்கும் ஒரு நண்பர் குழு கொடைக்கானலில் உள்ள டெவில்ஸ் கிச்சன் எனப்படும் குணா குகைக்குள் சென்று மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை நகைச்சுவை மற்றும் உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியுள்ளது மஞ்சும்மள் பாய்ஸ்.

இந்த படத்தில் கமல்ஹாசனின் குணா திரைப்படத்தின் பல நாஸ்டால்ஜிக்கான தருணங்களை நினைவுப் படுத்தியுள்ளனர். குறிப்பாக படத்தின் முக்கியமான ஒரு இடத்தில் குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன் எழுதும் கடிதம் பாடல் இடம்பெற்று ரசிகர்களுக்கு கூஸ்பம்ப் தருணமாக அமைந்துள்ளது.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் வெற்றிகரமாக இந்த படம் ஓடிவரும் நிலையில் படக்குழுவினரை அழைத்து கமல்ஹாசன் மற்றும் குணா படத்தின் இயக்குனர் சந்தானபாரதி ஆகியோர் சந்தித்து பாராட்டியுள்ளனர்.