1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 28 பிப்ரவரி 2024 (21:21 IST)

''அமரன்'' படத்திற்கு எழுந்துள்ள சர்ச்சை....படக்குழு அதிர்ச்சி

அமரன் பட டீசரில் சிவகார்த்திகேயன் பேசிய ஒரு தகாத வார்த்தை சர்ச்சையாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் அமரன்.   இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. 

அமரன் படம் கமர்சியல் படமாக உருவாகியுள்ளதாக இந்த டீசரில் தெரிந்தது.
 
அமரன் பட டீசரில் சிவகார்த்திகேயன் பேசிய ஒரு தகாத வார்த்தை சர்ச்சையாகியுள்ளது.
இதுகுறித்து, இப்படம் ராணுவ மேஜரை பெருமைப்படுத்தும் வகையில், எடுக்கப்பட்டுள்ளதால், இதற்கான ஷூட்டிங் அதற்கு சம்பந்தப்பட்ட இடங்களில் நடந்து வருகிறது.
 
ஆனால், இப்பட டீசரில் சிவகார்த்திகேயன் பேசிய தகாத வார்த்தைக்கு ராணுவ அதிகாரிகள் வருத்தம் தெரிவித்து, கமலுக்கு மெயில் அனுப்பியுள்ளனர். இது சிவகார்த்திகேயனுக்கும் போயுள்ளது.
 
இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ள  நிலையில்,   இதற்கு படக்குழு வருத்தம் தெரிவித்துள்ளனர்.
 
இப்படத்தின் டீசரை பல லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்த நிலையில், இப்படம் சென்சாருக்கு செல்லும்போது, குறிப்பிட்ட காட்சிகள் மியூட் அல்லது கட் செய்யப்படும் என தெரிகிறது.
 
ஆனாலும் இப்படத்திற்கு ராணுவ அதிகாரிகள் மத்தியில் ஒரு கருப்பு புள்ளி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.