1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 6 மே 2020 (16:14 IST)

ரஜினி கதையில் கமல்! லோகேஷ் பிராஜெக்டில் பெரிய டிவிஸ்ட்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக இருந்த கதையில் இப்போது கமலே நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

உலகநாயகன் கமலஹாசன் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள ஒரு திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மாஸ்டர் படத்தை முடித்த பின்னர் அந்த கதைக்கான வேலைகளை தொடங்கினார் லோகேஷ் கனகராஜ்.

கதையை முடித்து அதை ரஜினியிடம் சொன்ன நிலையில் அந்த கதையில் ரஜினிக்கு முழுமையான திருப்தி இல்லை என சொல்லப்படுகிறது. இதனால் என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டு இருந்த லோகேஷிடம் அந்த கதையில் தானே நடிப்பதாக கமல் தெரிவித்துள்ளதாகவும் அதனால் இப்போது கதையில் சில மாற்றங்களை செய்ய லோகேஷ் ஆயத்தமாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமலின் மிகப்பெரிய ரசிகர் என்பதும், அவரின் விருமாண்டி மற்றும் நம்மவர் ஆகிய படங்களின் கதையை முன்மாதிரியாக வைத்துதான் கைதி மற்றும் மாஸ்டர் ஆகிய படங்களை உருவாக்கியதாகவும் வெளிப்படையாகவே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.