1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 6 மே 2020 (15:56 IST)

தலைவர் வீட்டு குட்டிக்கு பொறந்தநாள்...அழகிய போட்டோவை வெளியிட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்!

தமிழ் சினிமாவின் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த். இவருக்கு சௌந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டார். மேலும்,சௌதர்யா  2010 ஆம் ஆண்டு அஸ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  

அஷ்வினுக்கும், சௌந்தர்யாவிற்கும் தேவ் என்ற மகனும் இருக்கின்றனர். ஆனால் திருமணமான சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டனர். இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் விசாகன் என்பவரை கடந்த 2019ல் மறுமணம் செய்துகொண்டனர்.

பல பிரச்னைகளை சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்த சௌந்தர்யா தற்போது கணவர் ,  மகன் என நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்துவருகிறார். விசாகன் மகன் வேத் மீது அவ்வளவு பாசம் வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது தனது மகனின் 5வது பிறந்தநாளை சௌந்தர்யா - விசாகன் தம்பதியினர் வீட்டிலிருந்தபடியே கொண்டாடியுள்ளனர். இந்த போட்டோவை ட்விட்டரில் வெளியிட வேத் பாப்பாவிற்கு அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.