1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 1 ஜூலை 2021 (18:33 IST)

மீண்டும் சினிமா பயணத்துக்கு தயாராகும் கமல்ஹாசன்… மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

அரசியல் கட்சி ஆரம்பித்ததில் இருந்து சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த கமல்ஹாசன் இப்போது மீண்டும் வரிசையாக படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளாராம்.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் இரண்டிலும் போட்டியிட்டார். ஆனால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. மேலும் கோடிக்கணக்கான ரூபாயை அவர் அரசியலில் இழந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போதைக்கு தேர்தல் எதுவும் இல்லாததால் கமல் மீண்டும் சினிமாக்களில் அதிகளவில் நடிக்க உள்ளாராம்.

ஏற்கனவெ இந்தியன் 2, தலைவன் இருக்கின்றான், விக்ரம் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ள அவர், இப்போது பாபநாசம் 2, வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் எனப் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்துள்ளாராம். இதனால் அடுத்த சில ஆண்டுகளுக்கு அவரின் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.