திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வியாழன், 1 ஜூலை 2021 (18:22 IST)

சன் டிவி சீரியலில் நடிகர் சந்தானம்!

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்  சந்தானம்.  இவர் சீரியலில் நடித்த புகைப்படம்  தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
 

 நடிகர் சந்தானம் 2004 ஆம் ஆண்டு சிம்பு நடித்த மன்மதன் படத்தில் காமெடியனாக நடித்து புகழ்பெற்றார். அடுத்து சச்சின் படத்தில் நடித்துப் புகழ்பெற்றார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து காமெடியில் சிறந்து விளங்கியவர் நடிகர் சந்தானம்.

இவர் தற்போத் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

இவர் தற்போது டிக்கிலோனா, மன்னவன் வந்தானடி, சர்வம் சுந்தரம், சபாபதி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சந்தானம் படம் தற்போது ஓடிடியில் ரிலீஸாகத் தயார் நிலையில் உள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இதுகுறித்து விரைவில் படக்குழு அறிவிக்கும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் விஜய் டிவியில் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான லொள்ளு சபா நிகழ்ச்சிக்கு முன்பு சன் டியில் நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் வெற்றி பெற்ற அண்ணாமலை சீரியலில் சந்தானம் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தி நடித்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.