ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 9 ஜூன் 2020 (08:46 IST)

கமல்-ரஹ்மான் இணையும் தலைவன் இருக்கின்றான் குறித்த அறிவிப்பு

கமல்-ரஹ்மான் இணையும் தலைவன் இருக்கின்றான்
சிவாஜி கணேசன், கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1992ஆம் ஆண்டு உருவான ’தேவர் மகன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ’தலைவன் இருக்கின்றான்’ என்ற திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக கமலஹாசன் சமீபத்தில் அறிவித்தார் என்பது தெரிந்ததே 
மேலும் இந்த படத்தில் ஆண்ட்ரியா மற்றும் பூஜா குமார் ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் முதல் பாகத்தில் நடித்த அதே கேரக்டரில் வடிவேலும் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது 
 
அதுமட்டுமின்றி இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் இந்த படத்திற்கு இசை அமைக்க இருப்பதாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் வரும் 11ஆம் தேதி மாலை 5 மணிக்கு கமல்ஹாசன் மற்றும் ஏஆர் ரஹ்மான் ஆகியோர் சமூக வலைதளங்களில் ’தலைவன் இருக்கின்றான்’ படம் குறித்து உரையாட உள்ளனர். இந்த உரையாடலில் இந்த படம் குறித்த முக்கிய தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் கமல் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்
 
ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது என்பதும், இந்த படம் தொடருமா? என்ற சந்தேகம் கோலிவுட் வட்டாரத்தில் உலவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது