வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (18:14 IST)

விஸ்வரூபம் 2 படம் எப்படி? ரேட்டிங் இதோ...

நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் 2 படத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால் எந்த தடையும் இன்றி விஸ்வரூபம் 2 நாளை வெளியாகவுள்ளது. 
ஆனால், படம் முன்னதாக மத்திய கிழக்கு பகுதியின் சில நாடுகளில் இன்று வெளியாகியுள்ளது. கடந்த 2013 ஆம் வெளியாக விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியாக விஸ்வரூபம் 2 ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகவுள்ளது. 
 
முதல் பாகத்தில் நடித்தவர்களே இரண்டாம் பாகத்திலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களில் கமல், ஆண்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர், ராகுல் போஸ் ஆகியோர் அடக்கம். 
 
இந்நிலையில் படம் மத்திய கிழக்கு நாடுகளில் வெளியானதால், உமர் சந்து என்ற சினிமா விமர்சகர் படம் எப்படி உள்ளது என்பதை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 
அதில், விஸ்வரூபம் - 2 அதிரடியாகவும், ரசிக்கும்படியான த்ரில்லிங் அனுபவம் தரும் விதத்தில் தயாராகியுள்ளது. கமலின் நடிப்பு மற்றும் இயக்கம் அருமை. படத்தில் இடம்பெற்றுள்ள அதிரடி காட்சிகள் பிரமிப்பை தருகின்றன என குறிப்பிட்டுள்ளார். மேலும் படத்திற்கு 3.5/5 ரேட்டிங் கொடுத்துள்ளார்.