வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 5 ஜூலை 2022 (13:15 IST)

பாராட்டா? கிண்டலா? ‘விக்ரம்’ படம் குறித்து வானதி ஸ்ரீனிவாசனின் டுவிட்!

vanathi
நடிகர் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தை பார்த்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்த டுவிட் கமல்ஹாசனுக்கு பாராட்டா? அல்லது கிண்டலா என்று நெட்டிசன்கள் குழபத்தில் உள்ளனர் 
 
கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தை பார்த்த திரையுலகப் பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனr என்று பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசனை தோற்கடித்து எம்எல்ஏ ஆனவர் பாஜகவை சேர்ந்த வானதி ஸ்ரீனிவாசன் 
 
இந்த நிலையில் சமீபத்தில் ‘விக்ரம்’ படத்தை பார்த்த வானதி ஸ்ரீனிவாசன் தேர்தல் காலத்தில் உங்களை வெற்றி பெற்றதற்கு மீண்டும் ஒருமுறை மகிழ்கிறேன் என்றும் விக்ரம் திரைப்படம் பார்த்தேன் என்றும் உங்கள் கலைப் பணியால் தொடர்ந்து மக்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்