செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 2 டிசம்பர் 2023 (18:19 IST)

பிரமிக்க வைக்கும் ’ஆளவந்தான்’ டிரைலர்.. இன்றைய தலைமுறையினரை கவருமா?

உலகநாயகன் கமல்ஹாசன் இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்த ஆளவந்தான் திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான நிலையில் 22 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் வரும் எட்டாம் தேதி வெளியாக உள்ளது.

டிஜிட்டலில் ரீமாஸ்டர் செய்யப்பட்டு மீண்டும் எடிட்டிங் செய்யப்பட்டு வித்தியாசமான முறையில் ஆளவந்தான் திரைப்படம் வெளியாக இருப்பதால் 20 வருடங்களுக்கு முன் பார்த்த படத்திற்கும் தற்போது பார்க்க இருக்கும் படத்திற்கும் வித்தியாசம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் சற்று முன் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக இன்றைய டெக்னாலஜி உலகில் இருக்கும் இன்றைய தலைமுறைக்கும் பிடிக்கும் வகையில் இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் வெளியான போது எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் தற்போது இந்த படம் வசூலில் சாதனை செய்யும் என்று கூறப்படுகிறது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இந்த படம்  இன்றைய தலைமுறையினரை கவருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Mahendran