விக்ரம் படத்துக்குப் பின்னரே இந்தியன் 2… கமல் எடுத்த முடிவு!
விக்ரம் படத்தை முடித்த பின்னரே இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்துகொள்ள கமல் முடிவெடுத்துள்ளதாக சொல்லபடுகிறது.
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இதனை எதிர்த்து லைக்கா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது சம்பந்தமாக மத்தியஸ்தர் ஒருவரை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் நியமனம் செய்தது என்பதும் அவருடைய அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் கமல்ஹாசன் இப்போது விக்ரம் படத்துக்கான படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார். இதனால் இனிமேல் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் விக்ரம் படத்தை முடித்த பின்னரே கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது.