1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (15:15 IST)

பாலசந்தர் இயக்கத்தில் கமலின் கடைசிப் படம்.. உன்னால் முடியும் தம்பி படத்தின் 32 ஆண்டு நிறைவு

பாலச்சந்தர் தமிழ் சினிமாவில் கமல் மற்றும் ரஜினி ஆகிய இருவருக்கும் குருநாதராக இருந்து இருவரையும் வளர்த்து விட்டவர்.

குழந்தை நட்சத்திரமாக கமல்ஹாசன் அறிமுகம் ஆகி இருந்தாலும், தன்னை அரங்கேற்றம் படம் மூலமாக மீண்டும் மக்களுக்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் பாலச்சந்தரையே தனது குருநாதராக கமல் கூறி வருகிறார். ரஜினியை வைத்து வெறும் 5 படங்களையே இயக்கியுள்ள பாலச்சந்தர், கமல்ஹாசனை வைத்து 27 படங்களை இயக்கியுள்ளார்.

இருவரும் இணைந்து கடைசியாக பணியாற்றிய படம் ‘உன்னால் முடியும் தம்பி’. இந்த திரைப்படம் இதே ஆகஸ்ட் 12 ஆம் தேதி 1988 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. படத்தில் கமல்ஹாசன் ஒரு அரசியல் பார்வை கொண்ட இளைஞராக நடித்திருப்பார். இந்த படத்துக்கு பிறகு மனக்கசப்பு காரணமாக இருவரும் இணைந்து பணியாற்றவே இல்லை.

இந்நிலையில் கமல் மற்றும் பாலச்சந்தர் ஆகிய இருவரின் ரசிகர்களும் இந்த படத்தை இன்று நினைவுகூர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.