புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 20 பிப்ரவரி 2020 (19:37 IST)

இந்தியன் 2 செட்டில் உயிரிழந்தவர்களுக்கு லைகா நிறுவனம் 2 கோடி நிதியுதவி!

ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்தின் படிப்பிடில் நேர்ந்துள்ள கோர விபத்து ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டில் இந்தியன் 2படத்தின் படப்பிடிப்பிற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென கிரேன் அறுந்து விழுந்தது.
 
இதில் இயக்குனர் ஷங்கரின் துணை இயக்குனர் கிருஷ்ணா, ஷங்கரின் பிஏ மது, ஆர்ட் அசிஸ்டண்ட் சந்திரன் என மூன்று இறந்துவிட்டனர். 10 பேர் காயம் படுகாயம் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் தமிழ் திரையுலகமே கருப்பு தினமாக மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த துணை இயக்குனர் கிருஷ்ணா பிரபல கார்ட்டூனிஸ்ட் மற்றும் விமர்சகரான மதன் அவர்களின் மருமகன் ஆவார். திரைத்துறையில் உள்ள பல்வேறு பிரபலங்கள் இறந்தவர்களின் கும்பத்திற்கு வருத்தம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டு வந்தனர். மேலும் சிலர் மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினர். 
 
இதையடுத்து நடிகர் கமல் ஹாசன் இந்த சம்பத்தில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்த குடும்பங்களுக்கு மொத்தம் 1 கோடி நிதி உதவி வழங்கினார். இந்நிலையில் சற்றுமுன் தயாரிப்பு நிறுவனமான லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் மொத்தம் 2 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளனர். இதில் இறந்த மூன்று பேருக்கு தலா 50 லட்சம் ருபாயும் மீதமுள்ள 50 லட்சம் ரூபாய் ஃபெப்சி யூனியனுக்கு வழங்கப்பட்டு அந்த தொகை காயமடைந்தவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும் என கூறியுள்ளனர்.